முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க ம.தி.மு.க. போராடி வருகிறது- வைகோ பேச்சு

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,செப் - 17 - நெல்லையில் அண்ணா பிறந்த நாள்விழாவை முன்னிட்டு மதிமுக திறந்த வெளிமாநாடு நடந்தது நெல்லை பொருட்காட்சி திடலில் நடந்த மாநாட்டிற்கு கொள்கை விளக்கஅணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகித்தார்.தூத்துக்குடி மாவட்டசெயலாளர் ஜோயல்,விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் தில்லை செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் வரவேற்பு உரை நிகழ்த்தினார். ஜெயராஜ் மாநாட்டை திறந்து வைத்தார்.நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் அண்ணா சுடர் ஏற்றினார். இதில் வைகோ கலந்து கொண்டு முல்லை பெரியார் அணை உடைக்கப்பட்டால் தென்தமிழகமே அழிந்து விடும் என பேசினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது,திராவிட இயக்கங்களுக்கு இன்று அறை கூவல்கள் எழுந்துள்ளன.நான் மதிமுகவை துவக்கியபோது என்னால் எந்த பதவியையும் தரமுடியாது,வியர்வை,ரத்தம் சிந்தும் தலைவர்கள் மட்டும் என்னோடு வரலாம் என அழைப்பு விடுத்தேன்.

18 ஆண்டுகளாக எனக்கு தோள் கொடுத்த தொண்டர்கள் பல தடைகளை கடந்து வந்திருக்கிறார்கள்.நாங்கள் எப்போதும் சாதாரணமானவர்கள்,ஆட்சி பொறுப்பை அலங்கரிக்காதவர்கள்.பெரியார்,அண்ணா காலத்தில் இல்லாத பேராபத்து இப்போது தமிழகத்தை சூழ்ந்துள்ளது.தமிழர்களின் உரிமையைக்காக்க மதிமுக இப்போது போராட்ட காலத்தில் உள்ளது.முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

அணையின் கொள்ளளவை 90 அடியாக குறைக்கவும்,பேபி அணையை தகர்க்கவும் கேரள அரசு முயற்சித்து வருகிறது.அணையை உடைக்காதே என முதல்வர் எச்சரிக்க வேண்டும்.எத்தனை தமிழர்கள் ரத்தம் சிந்தி அணையை கட்டியுள்ளனர். முல்லை பெரியாறு அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் 2லட்சம் ஏக்கர் பாசனம் இழக்கும்5மாவட்டங்கள் பஞ்சபிரதேசமாக மாறும் நிலை உருவாகும்,அணை இடிக்ப்பட்டால் தென் தமிழகமே அழிந்து விடும்.

பாடு பட்டு கட்டிய அணையை நாம் பாதுகாக்க வேண்டும்.கேரள மக்களுக்கு நாம் எதிரிகள் இல்லை,அணை எங்கள் ஊரில் உள்ளது என உடைத்தால் நாங்களும் கேரளாவிற்கு செல்லும் சாலைகளை உடைப்போம்,கேரளாவிற்கு பால்,காய்கறிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்து தான் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசுக்கும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன் சுப்ரீம் கோர்ட் உத்திரவை மீறி அவர்கள் அணையை உடைத்தால் நாங்கள் எங்கள் மாநிலத்தில் இருக்கிற மத்திய அரசு நிறுவனங்களை சொந்தம் கொண்டாடுவோம்.சோவியத் ரஷ்யா போல் இந்தியாவும் உடைந்து போகும் நிலை ஏற்படும்

கூடன்குளத்தில் அணுமின் நிலையம் கூடாது என இடிந்தகரையில் 127 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது அணுமின் நிலையங்களால் ஏற்பட்ட பாதிப்பை உலகமே உணர்ந்தது.அணுமின் நிலையங்களை அகற்ற ஜப்பானில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் இங்கோ கல்பாக்கத்திலும் கூடன்குளத்திலும் அணுமின் நிலையங்களை அமைத்து மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை அனுப்ப திட்டமிடுகின்றனர்.எமனை நமது தலையில் வைத்துதான் மின்சாரத்தை தயாரிக்க வேண்டும்

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய 3பேரின் தூக்கு தண்டணையை நிறுத்த மதிமுக போராடியது. ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் இவர்களுக்கு சம்பந்தமே இல்லை 2பேட்டரி வாங்கி கொடுத்தான் என்பதற்காக பேரறிவாளனுக்கு தூக்குதண்டணை விதித்து விட்டார்கள்.

தூக்கு தண்டணை கூடாது என காந்தியும்,நேருவும்,இந்திய அரசியல் அமைப்பை ஏற்படுத்திய அம்பேத்கரும் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் 13மாகாணங்களில் தூக்கு தண்டணை இல்லை.இந்தியாவிலும் தூக்குதண்டணையை ஒழிக்க மதிமுக 

தொடர்ந்து போராடும்.இவ்வாறு வைகோ பேசினார்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்