வறுமை கோடு குறித்த திட்டக்கமிஷன் நிர்ணயத்திற்கு எதிர்ப்பு

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.22 - நாட்டில் ஒருவருக்கு தினமும் ரூ.26-க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று திட்டக்கமிஷன் நிர்ணயம் செய்திருப்பதற்கு அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறைந்த வருமானம் உள்ளவர்கள் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் நடுத்தர வருமானம் மற்றும் அதிக வருமானம் உல்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் மற்றுமல்லாது வறுமை கோட்டை தாண்டியவர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் என்றால் வருமானம் எவ்வளவு என்பதை திட்டக்கமிஷன் அறிவிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி வறுமை கோட்டிற்கு கீழ் என்றால் தினசரி வருமானம் என்ன இருக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கும்படி திட்டக்கமிஷனுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி திட்டக்கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. அதில் கிராமப்புறங்களில் தனிநபர் வருமானம் ரூ.6-க்கு குறைவாக இருந்தால் அது வறுமை கோட்டிற்கு கீழ் என்றும் நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் ரூ.32-க்கு குறைவாக இருந்தால் அது வறுமை கோட்டிற்கு கீழ் என்றும் கூறப்பட்டுள்ளது. திட்டக்கமிஷனின் இந்த விளக்கத்திற்கு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது கிராமப்புறங்களில் வசிக்கும் ஒருவரின் தினக்கூலி குறைந்தது ரூ.100-ல் இருந்து 200 வரை உள்ளது. அதுவும் கேரள போன்ற மலைப்பகுதிகளில் ஒருவரின் தினக்கூலி அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி ரூ.300 ஆகும். திட்டக்கமிஷன் விளக்கத்தின்படி வருமானம் ரூ.26.32 ஆக இருந்தால் இந்தியாவில் யாரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வரமாட்டார்கள். அவர்களுக்கு அரசு சலுகை எதுவும் வழங்க தேவையில்லை. டெல்லியில் தினக்கூலி ரூ.240 ஆகும். அதுவும் இது குறைந்தது. இப்படி இருக்கையில் திட்டக்கமிஷன் நிர்ணயம் செய்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் யாரும் இல்லை என்பதை உலகிற்கு எடுத்துக்கூற மத்திய அரசும் திட்டக்கமிஷனும் சேர்ந்த செய்த சதித்திட்டம் என்று டெல்லியில் ஒரு பிரபல வழக்கறிஞர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: