முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி அமைச்சக குறிப்பு: கருத்து கூற ப.சிதம்பரம் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

காங்டாக், செப்.23 - 2 ஜி.  ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியிருந்த குறிப்பு குறித்து கருத்து தெரிவிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மறுத்து விட்டார். ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி.  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி (எம்.பி.) ஆகியோர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக அனுப்பியிருந்த குறிப்பு குறித்து ப.சிதம்பரத்திடம் கேள்வி கேட்டதற்கு அந்த கேள்விக்கு கருத்து கூற அவர் மறுத்து விட்டார்.

சிக்கிம் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடச் சென்ற ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போதுதான் மேற்கண்ட கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுப்பு தெரிவித்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பிய குறிப்பின் நகலை சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சாமி நேற்று முன் தினம் தாக்கல் செய்தார். 

பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக இருக்கும் வினி மஹாஜனுக்கு  நிதி அமைச்சகத்தில் உள்ள துணை இயக்குனர் பி.ஜி.எஸ். ராவ்தான் இந்த குறிப்பை அனுப்பியுள்ளார்.

இந்த ஆவணத்தை பிரணாப் முகர்ஜிதான் அனுப்பினார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த விஷயம் குறித்த கேள்விக்கு ப.சிதம்பரம் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்