முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஹினா ரப்பானி பேச்சால் அமெரிக்கா கடும் டென்சன்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.- 28 - அமெரிக்கா வேண்டுமானால் பாகிஸ்தான் உடனான உறவை முறித்துக்கொள்ளட்டும் அதனால் பாகிஸ்தானுக்கு நஷ்டம் கிடையாது என்றும் உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்து ஆளாக்குவதே அமெரிக்காதான் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி பேசியதையடுத்து அமெரிக்கா கடும் டென்சன் ஆனது. ஐ.நா. பொதுக்குழுக்கூட்டத்தில் முதலில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ராஜா கிலானி தான் செல்வதாக இருந்தது. ஆனால் தன்னை அமெரிக்கா அதிபர் சந்திக்க மறுத்துவிட்டதால் அதிருப்தியடைந்த கிலானி தனக்கு பதில் அமைச்சர் ஹினாவை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் ஆப்கானைச் சேர்ந்த ஹக்கானி தீவிரவாத குழுவுக்கும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. க்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. இது குறித்து ஹினா கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா வேண்டுமானால் பாகிஸ்தான் உறவை முறித்துக்கொள்ளட்டும். அது அவர்கள் இஷ்டம். இதனால் பாகிஸ்தானுக்கு நஷ்டம் ஏதும் கிடையாது. உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே அமெரிக்கா தான் என்று கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்புக்கு உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. ஆப்கானின் ஹக்கானி அமைப்பும் சி.ஐ.ஏ.வுக்கு  பிடித்தமான ஒன்றுதான். கடும் போராட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்திற்கு எதிரான போர் குறித்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் இந்த பேச்சால் அரசு மீது மக்கல் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். எங்களால் தீவிரவாதத்தை எதிர்த்து தனியாக போரிட்டு வெற்றி கொள்ளமுடியும். அமெரிக்கா தன் விருப்பத்திற்காக எந்த ஒரு நாட்டையும் அழித்துவிடமுடியாது. எங்களாலும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டமுடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை இவ்வாறு அவர் பேசினார். ஆனால் இந்த பேச்சால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவே முறிந்து போகும் அளவுக்கு மோசமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கிலானி அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புமாறு ஹினாவுக்கு உத்தவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆனால் இதை பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்