முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டி செளத் ஆஸ்திரேலியா அபார வெற்றி கொல்கத்தா அணிக்கு 2 -வது தோல்வி

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத், செப். - 29  - சாம்பியன்ஸ் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செளத் ஆஸ்திரேலிய அணி 19 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் செளத் ஆஸி. அணி தரப்பில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பெர்குசன் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். கிறிஸ்டியன், ஹாரிஸ் மற்றும் கேப்டன் கிலிங்கர் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். பின்பு பெளலிங்கின்  போது, புட்லான்ட் மற்றும் ஹாரிஸ் இருவரும் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரிச்சர்ட்சன் மற்றும் லையான் ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர்.  சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கத்தில் குரூப் பி யைச் சேர்ந்த கொல்கத்தா நை ட் ரைடர்ஸ் மற்றும் செளத் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டி ங்கை தேர்வு செய்தது. அந்த அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 5 விக்கெட்டை இழந்து 188 ரன்னை எடுத்தது. செளத் ஆஸி. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பெர்குசன் அதிகபட்சமாக, 40 பந்தில் 70 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இவரது அதிரடியால் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது.
அடுத்தபடியாக கிறிஸ்டியன் 27 பந்தில் 42 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர ஹாரிஸ் 19 பந்தில் 26 ரன் னையும், கேப்டன் கிலிங்கர் 18 பந்தில் 20 ரன்னையும் எடுத்தனர். கொல்கத்தா நைட் அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாள ரான பாலாஜி 27 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட்லீ மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  கொல்கத்தா அணி 189 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை செளத் ஆஸி. அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் னை மட்டுமே எடுத்தது.  இதனால் செளத் ஆஸ்திரேலிய அணி ஐதராபாத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில் 19 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.  கொல்கத்தா அணி சார்பில், எம்.கே. திவாரி 31 பந்தில் 40 ரன்னை எடு த்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, டென் டஸ் சாட்டே 16 பந்தில் 32 ரன்னையும், காலிஸ் 19 பந்தில் 20 ரன்னையும், பாட்டியா 13 பந்தில் 21 ரன்னையும் எடுத்தனர்.  செளத் ஆஸி. அணி தரப்பில், புட்லாண்ட் 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஹாரிஸ் 42 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, ரிச்சர்டுசன் 2 விக்கெட்டையும் லையான் 1 விக்கெட்டை யும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பெர்குசன் தே ர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்