முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி பங்கீடு: கேரளத்திலும் காங்கிரசுக்கு இழுபறி நீடிக்கிறது

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மார்ச்.- 7 - அடுத்த மாதம் 13 ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளத்தில் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. கேரள மாநிலத்தில் 140 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஜே.எஸ்.எஸ். கேரள காங்கிரஸ்(மாணி) ஆகியவற்றுக்கு திருப்திகரமாக தொகுதி பங்கீடு செய்ய வேண்டியதுள்ளது. இதனிடையே புதிதாக கூட்டணிக்கு வந்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் காங்கிரஸ் இடம் கொடுத்தாக வேண்டும்.

 கடந்த 2006 ம் ஆண்டு பேரவை தேர்தலில் 90 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. முஸ்லீம் லீக் 22 தொகுதிகளில் போட்டியிட்டது. வரும் தேர்தலில் இது கூடுதலாக 3 இடங்களை கேட்கிறது. இதற்கு முக்கிய காரணம் முஸ்லீம் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் மலைப்புரம் பகுதியில் தொகுதிகளை மறுவரை செய்ததில் 3 இடங்கள் அதிகமாக அமைந்துள்ளது. இந்த மூன்று இடங்களும் தங்களுக்கு தரப்பட வேண்டும் என முஸ்லீம் லீக் வற்புறுத்தி வருகிறது. அது போல மத்திய கேரளத்தில் செல்வாக்குள் கே.எம். மணியின் கேரள காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட 17 இடங்கள் போதாதென்று கூறி வருகிறது. தற்போது 24 இடங்களை கேட்டு வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்