முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணக் கண்கோடி வேண்டும்! மதுரை மீனாட்சி திருக்கோயிலில் நவராத்திரி கொலு

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,அக்- .1 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களை கவரும் வகையில் எழில்மிகு வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொலுவை முன்னிட்டு கோயில் பிரகாரங்கள், பொற்றாமரைக் குளம், கோபுரங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அம்மன் சன்னதி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொலுவை பார்வையிட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் திருக்கோயில் சார்பில் கொலு காட்சி அமைக்கப்படும். கோயில் நிர்வாகம் சார்பிலும், பக்தர்கள் அளிக்கும் பொம்மைகளை கொண்டும் திருக்கோயிலில் அம்மன் சன்னதி, வெளிப் பிரகார பகுதிகளில் இவை காட்சிக்கு வைக்கப்படும். தற்போது முழுக்க முழுக்க கோயில் நிர்வாக ஏற்பாட்டிலேயே சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன உதவியுடன் கொலு அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் சன்னதி வெளிப்பிரகார மேற்பகுதி கலை வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவர் அறையில் பிரதான கொலு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொலுவில் 3 அங்குலம் முதல் 3 அடி வரையிலான சுவாமி சிலைகள் இடம் பெற்றுள்ளன. காட்சியில் நடுநாயகமாக அருள்மிகு மீனாட்சி அம்மன், சொக்கநாதர், அதிகார நந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  பெரிய அளவிலான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, பக்த கண்ணியர், ரிஷப வாகனர், தட்சிணாமூர்த்தி, பதகணங்கள், தத்தாத்ரேயர், தசாவதாரம், அஷ்டலட்சுமி, விஷ்ணு, விஷ்வரூபம் என பல கடவுளர் திருவுருவ பொம்மைகளும் கொலுவில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து திருக்கோயில் திருவிழாக்களில் சுவாமி, அம்மன் எழுந்து பவனி வரும் தங்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட வாகனங்களும் கொலுவில் இடம் பெற்றுள்ளன. கொலுவை முன்னிட்டு கோயில் பிரகாரங்கள், பொற்றாமரைக்குளம், கோபுரங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொலு மண்டபத்தில் 12 அடிக்கு 12 அடி என்ற அளவில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள பொற்றாமரைக் குள வடிவமைப்பு காண்போரை கவருவதாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்