முருகப் பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நிறைவடைந்தது

Image Unavailable

திருப்பரங்குன்றம்,அக்.7 - திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி நவராத்திரி விழா ஆரம்பமாகியது. தினம் ஒரு கொலு அலங்காரத்தில் துர்க்கை கோவர்த்தனாம்பிகை அம்பாள் அருள்பாலித்தனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரமாகி தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்குள்ள வன்னி மரத்தில் சிறப்பு பூஜைகள் முடித்து சுவாமி எட்டு திக்குகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்து நிறைவு பெற்றது. பின்னர் தீபாராதனைகள் முடிந்து சுவாமி சேர்த்தி சென்றடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ