முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் ஊழல்: சி.பி.ஐ. குழு லண்டன் செல்கிறது

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, அக்.7 - டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஏற்பாடுகளில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்ததை சி.பி.ஐ. கண்டுபிடித்ததையடுத்து ஊழலில் ஈடுபட்ட போட்டி அமைப்புக்குழு தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு டெல்லி சிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி ஓட்டம், லண்டனில் நடந்த போது அதற்கான ஒப்பந்தங்களை சுரேஷ்கல்மாடி சில நிறுவனங்களுக்கு கொடுத்ததில் ஊழல்கள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. முதலில் இது தொடர்பான ஆவணங்கலை கொடுக்க இங்கிலாந்து இதிகாரிகளும், போலீசாரும் மறுத்தனர். தற்போது அந்த ஆவணங்களை தர சம்மதித்துள்ளதை தொடர்ந்து சி.பி.ஐ. குழு ஒன்று விரைவில் லண்டன் செல்ல உள்ளது. இங்கிலாந்து அதிகாரிகள் கொடுக்கும் ஆவணங்கள் காமன்வெல்த் போட்டி ஊழலை உறுதிபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!