முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு: 3-வது முக்கிய சதிகாரன் கைது

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 8 - டெல்லி ஐகோர்ட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக மூன்றாவது முக்கிய சதிகாரன் நேற்று கைது செய்யப்பட்டான். தேசிய புலனாய்வு அமைப்பு கிஷ்வாரை சேர்ந்த டாக்டர் வாஷிம் என்பவனை நேற்று கைது செய்தது. டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் கடந்த செப்டம்பர் 7 ம் தேதியன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் கிட்டத்தட்ட 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் 90 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி ஏற்கனவே இருவரை கைது செய்தது. இவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்வாரை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவன் அமீர் அப்பாஸ் என்பவனாகும். மற்றொருவன் அபீத் உசேன். குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பிறகு 3 மணி நேரம் கழித்து அபீத் உசேன் இ மெயில் அனுப்பியவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று இந்த வழக்கில் 3 வது நபரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவன் பெயர் டாக்டர் வாஷிம் என்பதாகும். இவனும் கிஷ்வார் என்ற இடத்தை சேர்ந்தவன். டெல்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய சதிகாரர்களாக பலர் சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவன்தான் இந்த வாஷிம். டாக்டர் வாஷிமின் சகோதரன் ஜூனைத் என்பவன்தான் டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மக்கள் நெருக்கும் மிகுந்த ரிசப்ஷன் பகுதியில் குண்டு வைத்தவன் என்று கருதப்படுகிறது. இந்த ஜூனைத் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹூதீன் இயக்கத்தின் தளபதி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கிஷ்வார் வாசிகளான அமீர் அப்பாஸ், அபீத் உசேன் ஆகியோரது காவல் நேற்று மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள சதிகாரர்கள் பற்றி தகவல் தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் தரப்படும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த சூழ்நிலையில்தான் 3 வது முக்கிய சதிகாரரான டாக்டர் வாஷிம் தேசிய புலனாய்வு அமைப்பால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மாணவன் வாஷிம் ஒரு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மாணவன் வாஷிமிடம் அவனது சகோதரன் ஜூனைத் பற்றியும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்