முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயரும் அபாயம் மும்பை வர்த்தகர்கள்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,அக்.- 10 - தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை அதிகரிக்கும் என்று மும்பை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். ஒரு பவுன் தங்கம் விலை ரூ.24 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஒரு பவுன் தங்கம் விலை கடந்த வைகாசி மாதம் ரூ. 16 ஆயிரமாக இருந்தது. இது ஆனி மாதம் ரூ.17 ஆயிரமாக அதிகரித்தது. அதனையடுத்து ஆடியில் கல்யாண சீசன் அதிகமாக இருக்காது. அதனால் தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆடி மாதம் தங்கம் விலை அதிகரித்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.22 ஆயிரம் வரை அதிகரித்தது. சரி. ஆடி மாதமே இந்த மாதிரி விலை உயர்ந்தால் திருமண சீசன் காலமான ஆவணியில் தங்கம் விலை ஒரு பவுனுக்கு சேதாரம், செய்கூலி இல்லாமல் ரூ.25 ஆயிரத்தை எட்டிவிடும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் ஆவணி மற்றும் இந்த புரட்டாசி மாதத்தில் தங்கம் விலை குறைந்து ஒரு பவுன் தங்கம் விலை நேற்று ரூ.19 ஆயிரத்து 540 ஆக இருந்தது. இது மேலும் குறைந்தால் நல்லது என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது மும்பை வர்த்தகர்கள் திடீரென்று பெரிய குண்டை தூக்கிப்போட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை எட்டும் என்று அச்சுறுத்தியுள்ளனர். உலக அளவில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளது. அதனால் பங்கு முதலீடு மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்யாமல் தங்கத்தின் மீது முதலீடு செய்ய பணக்காரர்கள் முடிவு செய்திருப்பதாகவும் இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்றும் மும்பை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்