முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைதேடி இந்தியாவை நோக்கி வரும் வெளிநாட்டு இளைஞர்கள்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,அக்.- 10 - மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் அந்த நாட்டு இளைஞர்கள் வேலைதேடி இந்தியாவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான்,லிபியா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் போர்தொடுத்ததாலும் அதிக வரி விதிக்கப்படுவதாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயத்தில் இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ள அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. அப்படி வேலை கிடைத்தாலும் அதிக சம்பளம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைதேடி இந்தியாவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மட்டும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இந்தியாவுக்கு வருவது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு தொழிற்சாலைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் விரைவான வளர்ச்சியை கண்டு வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதனால் இந்தியாவில் கடந்தாண்டில் இருந்து இதுவரை மேற்கத்திய நாட்டவர்கள் வேலையில் சேர்ந்திருப்பவர்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் வேலைவாய்ப்பு குறைவு, வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவுக்கு அவுட் சோர்ஸ் கொடுப்பது, அதிக அளவு வரி விதிப்பு ஆகியவைகள் காரணமாக இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வேலை தடி வருவதை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் இளைஞர்களுக்கு இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆட்டோமொபைல், பார்மசூடிக்கல்ஸ் ஆகிய துறைகளில் பணிக்கு சேருகிறார்கள். மேலும் இவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கிடைக்கிறது. வருடத்திற்கு 80 ஆயிரம் டாலர் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் வரை கிடைக்கிறது. வேலைதேடி இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் உயர் பதவியில் மட்டுமல்லாது சிறு சிறு பதவிகளிலும் பணிக்கு சேருகிறார்கள். மூத்த நிர்வாகிகள், மேலாளர் பதவிக்கு மட்டுமல்லாது கிளார்க் வேலையிலும் வெளிநாட்டவர்கள் சேருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்