முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு மாணவ,மாணவியர் ஒத்துழைப்புவேண்டும்- சகாயம்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 13 - நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு மாணவ, மாணவியர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.  மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான கருத்தரங்கில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் சுதந்திரமாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் நேர்மையோடு, சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். விறுவிறுப்பாக தேர்தல் நடைபெறவுள்ள காலக்கட்டத்தில் நான் இங்கே வந்திருக்கிறேன். தேர்வு நடைபெறவுள்ள காலக்கட்டத்தில் நீங்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள்.இந்த முக்கியமான தருணத்தில் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து முறையாக நாம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உங்களிடையே வலியுறுத்த தான் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது.  நடைபெற உள்ள இந்த தேர்தலில் நம்முடைய பங்களிப்பு என்ன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வது, மது பாட்டில்கள் வினயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் வருவாய் துறை மற்றும் பிற துறை அலுவலர்கள் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். எனவே நேர்மையானவர்களை நேர்மையான முறையில் சுதந்திரமாக உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க 18 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் முன் வரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அருளானந்தர் கல்லூரி முதல்வர் சேவியர் வேலாயுதம், தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பசும்பொன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி செயலாளர் பாலசுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங்ஞானதுரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உசிலம்பட்டி வட்டாட்சியர் ரவீந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்