முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அமைச்சர்கள் மீது அ.தி.மு.க. அரசுநடவடிக்கை நியாயமானது- இளங்கோவன்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில்,அக்.- 13 - குமரி மாவட்டத்தில் உள்ள“ட்சி தேர்தல் பதவியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் இளங்ககோவன் நேற்று காலை நாகர்கோவில் வந்தார். அப்போது அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள“ட்சி தேர்தலில் போட்டியிடுகிற காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நான், வாசன், மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காங்கிரஸ் தனியாக போட்டியிடுவதை அவர்கள் வரவேற்றுள்ளனர். இதில் திர”விட கட்சிகள் மீதுள்ள வெறுப்பை காண முடிந்தது. இது காங்கிரஸ் இயக்கத்திற்கு வெற்றியைத் தேடித்தரும். க”ங்கிரஸ் வெற்றி பெற்ற உடன் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை கிராமங்களில் எந்தவித கமிஷனும் இல்லாமல் முழுமையாக அந்த தொகையை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் செலவு செய்வார்கள். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய தோல்வியை க”ங்கிரஸ் சந்தித்தாலும், அதிலும் உற்சாகத்தையும், புத்துணர்வையும் தந்தது குமரி மாவட்டம்.  உள்ள“ட்சி தேர்தலில் முதன்மையான கட்சியாக காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டியதில் குமரி மாவட்டத்தின் பங்கு முக்கியமானது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசார் தி.மு.க.வினருக்கு மறைமுகமாக உதவுகின்றனர் என்று நல்லக்கண்ணீ ஒரு பக்கத்தை மட்டும் சொல்கிறார். மறுப்பக்கத்தில் தி.மு.க.வினர் கா தமிழக தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இல்லை. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது மாநில அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கை 100 சதவீதம் நியாயமான நடவடிக்கை. ஜெயலில் உள்ள முன்ன”ள் அமைச்சர்கள் தேச விரே”த செயல்களில் ஈடுபட்டவர்கள், ஏழைகளை ஏமாற்றியவர்கள். தேர்தல் நேரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்று வேலை செய்கிறோம். தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது கவலைக்குரியது. மத்திய அரசு இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்வானி ரதயாத்திரை நடத்துவது புதியது அல்ல. இவ்வாறு அவர் கூறின”ர். பேட்டியின் போது குமரி கிழக்கு ம”வட்ட தலைவர் ராபர்ட் புரூஸ், மேற்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் எம்.எல்.ஏ., ஜான்ஜேக்கப் எம்.எல்.ஏ., விஜயதரணி எம்.எல்.ஏ., ஜேம்ஸ், நாகர்கோவில் நகரசபைதலைவர் அசோகன் சாலமன், நகரசபை க”ங்கிரஸ் வேட்பாளர் ஐரின்சேகர் மற்றும் நிர்வ”கிகள் பலன் உடன் இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்