முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ - உதயகுமார் ஓட்டு போட்டனர்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.18 - மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஏ.கே. போஸ் எம்எல்ஏ, முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் நேற்று மாநகராட்சி தேர்தலில் ஓட்டு போட்டனர். மதுரை மாநகராட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது தாயார் ஒச்சம்மாள்,மனைவி ஜெயந்தி ஆகியோருடன் நேற்று காலை மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அண்ணாநகர் அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மதுரை மேயர் வேட்பாளர் வி.வி.ராஜனசெல்லப்பா தனது மனைவி மகேஸ்வரி, மகன் ராஜூ சத்தியன், மருமகள் வனிதா ஆகியோருடன் பசுமலை சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ நேற்று மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.தமிழரசன் பதினெட்டாங்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சென்று ஓட்டு போட்டார்.

மதுரை மேற்கு பகுதி கழக செயலாளர் பெ.சாலைமுத்து பழங்காநத்தத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார். மதுரை மேற்கு தொகுதி கழக செயலாளர் எஸ்.முருகேசன் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சென்று சொக்கலிங்கநகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி, ஜனநாயக பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் அண்ணாநகர் அம்பிகா கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அதிமுக மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி ஜம்புரோபுரம் மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் சென்று ஓட்டு போட்டார். 

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி  தனது மனைவி காந்தியுடன் சென்று டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திமுக மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியிலும், காங்கிரஸ் மேயர் வேட்பாளர் ஐ.சிலுவை பெத்தானியாபுரம் வாக்குச்சாவடியிலும், தேமுதிக மேயர் வேட்பாளர் கவியரசு நாகனாகுளம் சமுதாயகூட வாக்குச்சாவடியிலும், திமுக மேயர் வேட்பாளர் பாஸ்கரசேதுபதி புதூர் பகுதி வாக்குச்சாவடியிலும், முன்னாள் அமைச்சர் தமிழரசி நாகனாகுளம் வாக்குச்சாவடியிலும் ஓட்டு போட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!