முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி நகர் மன்ற தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

 

ஸ்ரீவில்லி, அக். 22 - ஸ்ரீவில்லி நகர் மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரி அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க. வினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லி நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று ராஜபாளையம் பி.ஏ.சி. ஆர். பாலிடெக்னிக்கில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் அதிகாரி முத்துக்கண்ணு தலைமையில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாரி 20,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் தி.மு.க.விடம் இருந்த ஸ்ரீவில்லி நகராட்சி அ.தி.மு.க. கைவசமானது. 

செந்தில்குமாரியை அடுத்து தி.மு.க.வை சேர்ந்த தேவகி 12,187 வாக்குகளும், தே.மு.தி.க. செல்வலெட்சுமி 3,170 வாக்குகளும், காங்கிரஸ் முத்துச்செல்வி 1,873 வாக்குகளும், பி.ஜே.பி. நாகநந்தினி 1,379 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரி 8,699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 33 வார்டுகளில் தேர்தல் நடந்த 32 வார்டுகளில் 1,4,7,8,9,11,13,20,24,25,26,30,31 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 8 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேட்சைகள் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்