முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முரசொலி-கலைஞர் டி.வி.க்கு ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட மிட்-டே, முரசொலி ஆகிய பத்திரிகைகளும், கலைஞர் தொலைக்காட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயலலிதா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் அனுப்பி உள்ள இந்த நோட்டீசில் இவ்வாறு மன்னிப்பு கேட்கத்தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து வெளிவரும் மிட்-டே ஆங்கில நாளிதழில் கடந்த 4-ம் தேதி வெளியான ``ரச்ஙிஹடூ உஞ்​இஙி பகீடீ தடீஹங் நசிச்ஙுநீ ஸடீகீடுடூக்ஷ ஏஹஙூஹடூ அங்டு நசிஹஙூகீ'' என்ற செய்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறான கருத்து திணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன், அந்த பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில்தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி விஷமத்தனமானது. கீழ்த்தரமானது, மிக மோசமாக திரித்து கூறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜெயலலிதா அறிக்கைகளை வெளியிட்டு வந்ததையும், தனது நோட்டீசில் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த செய்தி மேலும் திரித்து வெளியிட்டுள்ள தி.மு.க. நாளிதழான முரசொலியின் ஆசிரியர் எஸ்.செல்வத்திற்கும், இந்த செய்தியை கடந்த 5-ம் தேதி ஒளிபரப்பிய கலைஞர் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கும், ஜெயலலிதா சார்பில் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முற்றிலும் உண்மைக்கு மாறான இந்த செய்தியை ஜெயலலிதா முழுமையாக மறுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமுதாயத்தின் மிகவும் பொறுப்பு வாய்ந்த தேச பக்தி நிறைந்த பிரஜையும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு இந்த செய்தியால் ஏற்பட்டுள்ள இழப்பை அளவிட முடியாது என்றும், பண அடிப்படையில் இதை மதிப்பிட முடியாது என்றும் பி.எச்.மனோஜ் பாண்டியன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

துளி கூட உண்மை இல்லாத இந்த செய்தியை வெளியிட்ட மிட்-டே நாளிதழ் ஆசிரியர், முரசொலி நாளிதழ் ஆசிரியர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, அதனை அந்ததந்த நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும், 

கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், தனது நிபந்தனையற்ற மன்னிப்பை கலைஞர் தொலைக்காட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்ப வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மன்னிப்பு கோரத்தவிறினால், ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பித்ததோடு, மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியதற்காக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago