விந்தியாச்சல் கோவிலில் ராகுல் சாமி கும்பிட்டார்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மீர்சாபூர், நவ.3 - உத்தரபிரதேச மாநிலம் மீர்சாபூரில் உள்ள புகழ்பெற்ற விந்தியாச்சல் கோவிலில் நேற்று ராகுல் சாமி கும்பிட்டார். பிறகு கணதித் அஷ்ரத் இஸ்மாயில் சிஸ்தி தர்ஹாவிலும் அவர் பிரார்த்தனை செய்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி எம்.பி., உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மீர்சாபூரில் உள்ள புகழ்பெற்ற விந்தியாச்சல் கோவிலுக்கு சென்ற ராகுல்காந்தி, அங்கு சிறிதுநேரம் வழிபாடு நடத்தினார். அதன்பிறகு அஷ்ரத் இஸ்மாயில் சிஸ்தி தர்ஹாவிலும் அவர் பிரார்த்தனை செய்தார். இந்த இரு புனித தலங்களுக்கும் சென்றபிறகு அவர் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.  உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் மக்களை சந்தித்து தங்களது கட்சிக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல்காந்தியும் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில்  அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று அவர் வாரணாசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: