முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய நேரடி முதலீடு குறைந்தது

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.- 7 - நாட்டில் அன்னிய முதலீடு கடந்த செப்டம்பர் மாதத்தில் 16.5 சதவீதம் அளவுக்கு அதாவது 1.76 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு குறைந்தது. நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளையும் தொழிற்சாலைகளையும் பெருக்க வேண்டுமென்றால் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனால் வெளிநாடுகளில் இருந்து முதலீடு வரவேற்கப்படுகிறது. இதே மாதத்தில் கடந்தாண்டு அன்னிய நேரடி முதலீடு 2.11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதன் பின்னர் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அன்னிய நேரடி முதலீடு குறைந்தது. ஓராண்டுக்கு முன்னர் அன்னிய நேரடி முதலீடு 11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 74 சதவீதம் அதிகரித்து 19.13 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு 19.4 பில்லியனாக இருந்தது. இது கடந்த 2011-12-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார நிலை ஸ்திரமற்ற நிலையில் இருந்தாலும் அன்னிய நேரடி முதலீடு 35 பில்லியனாக அதிகரித்தது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்