முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா பகுதியில் உபரி நீர்: ஜெயலலிதா ஆலோசனை

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.- 9 - காவிரி டெல்டா பகுதிகளில் உபரி நீர் கலப்பதை தடுத்து சேமிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து விபரம் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், காவேரி டெல்டா பகுதிகளில் உபரி நீர் மற்றும் வெள்ளநீர் கடலில் கலப்பதைத் தடுத்து சேமிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், தகவல் தொழில்நுட்பத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், வருவாய்த்துறை  அமைச்சர் பி.தங்கமணி, தலைமை செயலாளர் தேவேந்திரநாத்சாரங்கி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்