முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கூட்டுக் குழு முன்பு தணிக்கைக் குழு தலைவர் ஆஜர்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.16 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடத்திவரும் பாராளுமன்ற கூட்டுக் குழு முன்பு மத்திய தணிக்கைக் குழு தலைவர் (டைரக்டர் ஜெனரல்)நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தலைவர் வினோத் ராய் தனது அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட 14 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் இப்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இமாலய ஊழல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கை குழுவின் முன்னாள் தலைவர் ஆர்.பி.சிங் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார். வினோத்ராயின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், ஆனால் ரூ. 2,645 கோடிக்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில் மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவர் வினோத்ராய் துணைத் தலைவர் ரேகா குப்தா ஆகியோர் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ முன்பு ஆஜராக நேற்று காலை 11 மணிக்கு வந்திருந்தனர். அவர்கள்  ஏறத்தாழ 1 மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் இந்த பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜரானார்கள்.  ஆனால் இவர்கள் இந்த குழு முன்பு என்ன விளக்கத்தை அளித்தார்கள் என்பது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்