முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்துக் கழக இயக்குநர்களுடன் அமைச்சர் ஆலோசனை

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தினார். நேற்று காலை 10.30 மணியளவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து மேலாண் இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர், அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து மேலாண் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு மற்றும் திறனாய்வு குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது அமைச்சர் மேற்படி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை பெருக்குதல், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளுதல், முறையான பேருந்து பராமரிப்பு, சீரான பேருந்து இயக்கம், விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கை, பேருந்துகளின் தூய்மை ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்