முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`ஒஸ்தி' படத்தை திரையிட மாட்டோம்..!

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.4 - சிம்பு நடித்த `ஒஸ்தி' படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சிம்பு நடித்த ஒஸ்தி படம் வருகிற 8-ம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் இப்படத்தை சன் டி.வி. தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ளது. இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் `ரோகினி' பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

`ஒஸ்தி' படத்தை சன் டி.வி. நிறுவனம் தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரூ.2 1/2 கோடி டெபசிட் தொகையை திருப்பி தராததால் அவர்கள் வெளியிடும் படத்தையும், தொலைக்காட்சி உரிமை பெற்றுள்ள படத்தையும் வெளியிடப் போவதில்லை என்று அறிவித்தோம்.

அதன்படி எங்கள் முடிவில் மாற்றம் இல்லை. இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எங்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயகுமார் கொடுத்த கடிதத்தை வைத்து படத்தை வெளியிட தடை இல்லை என்று கூறியிருக்கிறார்கள். ஒரு சங்கத்தின் துணைத்தலைவர் கொடுத்த கடிதத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள். அபிராமி ராமநாதன், சன் பிக்சர்ஸியிடம் இருந்து பணம் வாங்கி விட்டார். அதனால் அவர் படத்தை வெளியிடுவேன் என்கிறார்.

இனி அபிராமி தியேட்டர் வளாகத்தில்வெளியாகும் எந்த திரைப்படங்களையும் நாங்கள் வெளியிட மாட்டோம்.

சன் பிக்சர்ஸ் எங்களுக்கு தரவேண்டிய ரூ.2 1/2கோடி பாக்கியை கொடுத்தால் தான் படத்தை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சங்க நிர்வாகி திருச்சி ஸ்ரீதர் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்