முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பான் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது: பாக். திட்டவட்டம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,டிச.- 5 - ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பான் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிப்பு அடைந்துள்ளது.  பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் தாக்கியதாகும் இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பாகிஸ்தான், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தையொட்டி ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பான் நகரில் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கில்லாரி கிளிண்டன் பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது என்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியானது தற்செயலாக நடந்த சம்பவம் என்று கிலானியிடம் ஹில்லாரி விளக்கினார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது என்றும் விசாரணை முடியும் வரை பொறுமையாக இருக்கும்படியும் கிலானியை கிளிண்டன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பான் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கிலானியை ஹில்லாரி கேட்டுக்கொண்டார். ஆனால் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று கேபினட் எடுத்த முடிவுக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பாராளுமன்ற கமிட்டி ஒப்புதல் அளித்துவிட்டது. அதனால் பான் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்று கிலானி தெரிவித்துவிட்டதாக இஸ்லாமாபாத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!