முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ்கள்அனைத்து வசதிகளுடன் அழகாக இருக்க ஜெயலலிதா உத்தரவு

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.- 10 - முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களுக்கு `பாடி' கட்டும் இடம், பஸ்கள் பழுது பார்க்கும் பிரிவு போன்றவைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். பஸ்களுக்கு நல்ல பெயிண்டாக அடிக்க வேண்டும், பஸ்சின் ஜன்னல்கள் ஒழுங்காக இருக்க வேண்டும், பஸ்களின் இருக்கைகள் அனைத்தும் ரெக்சின் துணியில் ஒரே சீராக இருக்க வேண்டும், பஸ்களின் நம்பர் பிளேட்டுகள், எந்த ஊருக்கு செல்கிறது என்பதை தெளிவாக எழுத வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் வழங்கினார். பஸ்களில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மிக மிக தரமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். பஸ்சை பார்த்து அனைவரும் பிரமித்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டார். இன்னும் சிறப்பாக செய்ய என்னென்ன தேவை என்றும் அமைச்சர் கேட்டார்.  சென்னை குரோம்பேட்டையில் 28 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தேவையான புதிய பஸ்களை வடிவமைக்கும் தொழிற்சாலை உள்ளது. டயர்களை புதுப்பிக்கும் பிரிவு, பழைய பஸ்களை புதுப்பிக்கும் பிரிவு போன்றவை உள்ளது. நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து பிரிவுகளையும் சுற்றிப் பார்த்தார்.  பஸ்களுக்கு தேவையான உபகரணங்கள் இருப்பு வைக்கும் இடத்தை சென்று பார்த்தார். எவ்வளவு இருப்பு உள்ளது என்று கேட்டார். அங்குள்ள டியூப்களை கையில் எடுத்து பார்த்து தரமானதுதானா? எங்கிருந்து வாங்குகிறீர்கள்? எந்த கம்பெனி? என்ற விபரங்களை கேட்ட அமைச்சர், அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  ஒரு டயர் 60 ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் வரை உழைக்க வேண்டும். டயர்களில் ஏதேனும் பழுது இருந்தால் சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் கொடுத்து விட்டு வேறு டயர் வாங்குகிறோம். இங்கிருந்து பஸ் டெப்போக்களுக்கு டயர், டியூப் மற்றும் கருவிகள் செல்கின்றன என்று அமைச்சரிடம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பூபதி கூறினார். ஒரு பஸ்சுக்கு சராசரியாக 5 ஆயிரம் மதிப்புள்ள `ஸ்பேர் பார்ட்ஸ்' இருப்பு இருக்கும் என்றும், தற்போது 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு இருப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்