முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி பிறந்தநாள் தி.மு.க.தலைவர் கருணாநிதி வாழ்த்து

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச. - 10 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில்,  இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம், நெருக்கடியான கட்டத்தில் உள்ள நிலையில் நீங்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறீர்கள். இந்திய மக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு உங்கள் பணி வரலாற்று சிறப்புவாய்ந்தது. தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவுக்கு அனைத்து திறமைகளும் உங்களிடம் உள்ளதாக இந்திய மக்கள் நம்புகின்றனர். சிறிய உடல் நலக்குறைவுக்கு பிறகு ஏழை, எளிய மக்களின் சேவையில் உங்களை மீண்டும் அர்ப்பணித்து கொண்டுள்ளீர்கள். இந்தியாவின் நலனுக்கான உங்கள் பணிகள் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்