முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைக் ரேஸ் பந்த்தயத்தால் பறிபோன பாதசாரியின் உயிர்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.15 - விளையாட்டுக்காக பைக் ரேஸ் நடத்தி பல லட்சம் பந்தயம் கட்டி சாலையில் வேகமாக பைக் ரேஸ் விளையாடியவர்களால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பாதசாரியின் உயிர் பரிபோனது. இதுசம்பந்தமாக 4 பேரை போலீசார் கைது செய்து 3 விலை உயர்ந்த ரேஸ் பைக்குளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த ஞாயிறு அன்று அதிகாலை சென்னையை சேர்ந்த சில வாலிபர்கள் சென்னையிருந்து மாகபலிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் ரேஸ் நடத்த முடிவெடுத்து அதற்கு பல லட்சம் பந்தயம் கட்டியுள்ளனர். திட்டமிட்ட படி ஞாயிறு அன்று அதிகாலை திருவான்மியூரிலிருந்து ஈசிஆர் சாலை நோக்கி அதிவேகமாக மோட்டர் சைக்கிள்கள் பறந்துள்ளன.

1000 சிசிக்கும் மேலான எஞ்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் 225 கிமீ தூரம் வரை வேகம் செல்ல கூடியவை அந்தகைய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது கானாத்தூர் அருகே காவலாளி வேலை பார்க்கும் துரைசாமி (53) என்பவர் சாலையை கடந்துள்ளார். வேகமாக ஒருவரை ஒருவர் முந்தியபடி வந்த மோட்டார் சைகளில் அபிராமபுரத்தை சேர்ந்த அரவித்த வெங்கடசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையை கடந்த துரைசாமியின் மீது மோதியது. மோதிய வேகத்தில் துரைச்சாமியின் கால்களும், கைகளும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். ரேஸ்பைக்கை ஓட்டி வந்த தொழிலதிபர் அர்விந்த் மயங்கி விழுந்தார்.

பின் கால் முறிவுக்காக அர்விந்த் தனியார் மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டார். இதுற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய அடையாறு போக்குவரத்து போலீசார் ரேஸ் நடத்தியதாக பெசன்ட்நகரை சேர்ந்த ஆனந்தன் (35), திருவான்மியூரைச் சேர்ந்த கார்த்திக் (31), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஆதித்யா (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 ரேஸ் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர் மோட்டார் சைக்கிளை காவலாளி மீது மோதி பலி கொண்ட அர்விந்த் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிடிபட்ட 3 பைக்குகளும் 1000 சிசி வரை இன்ஜின் திறன் கொண்டவை 6 நொடிகளில் 80 கி.மீ வேகத்தை தாண்டும் திறன் கொண்டவை மணிக்கு  225 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இந்த பைக்குகள் ஒவ்வொன்று ரூ.2 லட்சம் முதல் ரூபாய் பல லட்சம் வரை விலை கொண்டவை. இவர்கள் நடத்தும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் லட்சம் ரூபாய் வரை பந்தய தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இதுபோன்று சிலரின் ஆதாயத்துக்காவும், ஜாலிக்காவும், நடத்துகின்ற இதுபோன்ற பந்தயம் மதிப்புமிக்க ஒரு உயிரை பறித்துவிட்டது.

இதுபோன்ற வழக்குகளில் சட்டப்படி சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படுவதால் யாருக்கும் பயம் ஏற்படுவதில்லை. நாளுக்கு நாள் பெருகிவரும் நாகரீகம் அறிவியல் வளர்ச்சி பொருளாதார மாற்றம் காரணமாக அதிநவீன பைக்குகள் சென்னை போன்ற நகரங்களில் விலைக்கு கிடைக்கிறது. இந்த பைக்குகள் சென்னை சாலைகளில் ஓட்டமுடியாத அளவு வேகம் கொண்டவை இத்தகைய பைக்குகளை வாங்குகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. அளவுக்கு மீறிய வேகம், உற்சாகம், ஜாலி காரணமாகவும், பணத்துக்காகவும் இத்தகைய பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

பெரும்பாலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது. கடற்கரை சாலையில் அடிக்கடி நடத்தப்புடம் ரேஸ்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மோட்டார் பைக் பந்தயம் அல்லாமல் ஆட்டோ பந்தயங்களும் சனிக்கிழமை இரவுகளில் நடத்தப்படுகிறது. இதற்காக தனியாக ஆட்டோக்கள் தயார் செய்யப்பட்டும் நடத்தப்படுகிறது. ஒரு ஆட்டோ அல்லது ரூ.50 ஆயிரம் பந்தய தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்