முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலாவது டெஸ்ட்: தெ.ஆ. அணி நிதான ஆட்டம்

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

செஞ்சுரியன், டிச. 17 - இலங்கை அணிக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தெ.ஆ. அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்னை எடுத்துள்ளது. அந்த அணி தற்போது 32 ரன் முன்னிலையில் உள்ளது. தெ.ஆ.அணி தரப்பில் கேப்டன் ஸமித் அரை சதம் அடித்து ஸ்கோர் கெளரவமான நிலையை எட்ட உதவினார். ருடால்ப்பும், ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக ஆடி, அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். 

தெ.ஆ.அணி 2 -ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில், 73 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்னை எடுத்து இருந்தது. அப் போது டிவில்லியர்ஸ் 29 ரன்னுடனும், பிரின்ஸ் 22 ரன்னுடனும் களத் தில் இருந்தனர். 

இலங்கை மற்றும் தெ.ஆ.அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. 

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தெ.ஆ. பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியி ல் அந்த அணி 180 ரன்னில் சுருண்டது. மேத்யூஸ் 38 ரன்னையும், சமரவீ ரா 36 ரன்னையும், பரணவிதானா 32 ரன்னையும், ஜெயவர்த்தனே 30 ரன்னையும் எடுத்தனர். 

தெ.ஆ. அணி தரப்பில், கேப்டன் ஸ்மித் மற்றும் ருடாப்ல்ப் இருவரும் நன்கு ஆடி அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். கேப்டன் ஸ்மித் 105 பந்தில் 61 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதி யில் அவர் எல்.பி.டபிள்யு.வாகி வெளியேறினார். 

மற்றொரு துவக்க வீரரான ருடால்ப் 140 பந்தில் 44 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பெரீரா வீசிய பந்தில் பரணவிதானாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் தெ. ஆ. அணி முதல் இன்னிங்சில் 73 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்னை எடுத்து இருந்தது. அப் போது டிவில்லியர்ஸ் 62 பந்தில் 29 ரன்னையும், பிரின்ஸ் 41 பந்தில் 22 ரன்னையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

அந்த அணி தற்போது 32 ரன் முன்னிலையில் உள்ளது. மற்றொரு முன் னணி வீரரான காலிஸ் 56 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர, அம்லா 18 ரன்னில் அவுட்டானார். நைட் வாட்ச்மேனாக இறங்கிய ஸ்டெயின் பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தார். 

இலங்கை அணி தரப்பில், பெரீரா 72 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். வெலிகேடரா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஹெரராத் மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்