முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பண புழக்கத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 29 - 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக இது தொடர்பாக எச்சரித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் நேரடியான பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதை அரசியல் கட்சிகளும் உணர்ந்து எந்த சந்தர்ப்பத்திலும் நேரடி பண விநியோகம் மேற்கொள்ள கூடாது என்றும் இதை கட்சி தொண்டர்களும் அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உள்ள வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவையும் தேர்தல் ஆணையம் உஷார்படுத்தி உள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட பணம் கைமாறும் இடங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பணம், மதுபானம் உள்ளிட்ட பரிமாற்றத்தை கண்காணிக்குமாறும் அவ்விதம் கொடுப்போர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் செலவிடும் தேர்தல் செலவு அனைத்தும் அன்றாடம் குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்