முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விஞ்ஞான 99-வது மாநாடு பிரதமர் இன்று துவக்கிவைக்கிறார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வரம்,ஜன.- 3 - புவனேஸ்வரத்தில் இந்திய விஞ்ஞான 99-வது மாநாடு இன்று ஆரம்பமாகிறது. மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கிவைத்து உரையாற்றுகிறார். இந்திய விஞ்ஞான மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகள் நிபுணர்கள் கலந்துகொள்வார்கள். இந்திய விஞ்ஞான 99-வது மாநாடு, ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்து நீண்ட உரையாற்றுகிறார். உலகம் முழுவதும் இருந்து நோபல் பரிசு பெற்ற20-க்கும் மேற்பட்டவர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழுவினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மாநாட்டின்போது காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, மாசு அற்ற எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது. மாநாட்டில் விஞ்ஞானிகள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பிப்பார்கள். மாநாட்டில் விஞ்ஞானம்-தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் கருத்தரங்கு நடைபெறும். அப்போது விஞ்ஞானிகள் புதுப்புது கருத்துக்களுடன் உரையாற்றுவார்கள். மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது. கர்நாடக மாநில பெண்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா பாலி தலைமையில் இந்த கருத்தரங்கு நடைபெறும். குழந்தைகள் இறப்பை தடுப்பது, கிராமப்புறங்களில் விஞ்ஞானம் மற்றும் கல்வி, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி கருவிகள் என்ற தலைப்பிலும் கருத்தரங்குகள் நடைபெறும். தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்வது ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும். வருகின்ற புதன்கிழமை மாநாட்டின் ஒரு நிகழ்ச்சியாக குழந்தைகள் விஞ்ஞான மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார். பெண்கள் விஞ்ஞான மாநாட்டை அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதர் நிரூபமராவ் துவக்கி வைக்கிறார். சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒரிசாவில் மீண்டும் நடக்கும் இந்த மாநாட்டில் விஞ்ஞானிகள்,தலைவர்கள், தொழிலதிபர்கள், பெரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனர்கள் உள்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்