முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி:நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில்வழக்கு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 9 - நக்கீரன் வார இதழில் முதல்​அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிடப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். நக்கீரன் பத்திரிகையும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.  ராயப்பேட்டை ஜானி ஜான்கான் ரோட்டில் உள்ள நக்கீரன் அலுவலகம் முன்பு வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அசோக் எம்.எல்.ஏ. உள்பட 300 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகர் அன்பு ஒரு புகார் அளித்தார். அதில், முதல்​ அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீதும், ஆசிரியர் கோபால் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.  இதை தொடர்ந்து நக்கீரன் கோபால் மீது 506 (2) (கொலை மிரட்டல்), 505 (மன உளைச்சலை ஏற்படுத்தி சட்டம்​ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல்), 504 (உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது), 323 (கையால் தாக்குதல்), 148 (ஆயுதம் வைத்திருந்தல்), 147 (சட்ட விரோதமாக கூடுதல்) ஆகிய 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு