முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: கோர்ட்டில் 2 பேர் சரண்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஜன-13 - தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத்தலைவர் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்திட்டை சேர்ந்தவர் பசுபதிபாண்டியன். இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராவார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திண்டுக்கல் மாவட்டம் நந்தவனம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு 8 மணியளவில் தான் வசித்துவந்த வீட்டிற்கு முன்பகுதியில் அவர் அமர்ந்திருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். தமிழகம் முழுவதும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை  திண்டுக்கல் போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் பசுபதி பாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான அலங்காரதிட்டில் அடக்கம் செய்வதற்காக எடுத்துவரப்பட்டது. அப்போது தூத்துக்குடி பகுதியில் வாகனங்கள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த ஜெயபாண்டி என்பவரது மகன் அருளானந்தம்(29), நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள இடையர் தவணையை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் ஆறுமுகசாமி(26) ஆகிய இருவரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை நீதிபதி 7 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் தாத்தா சிவசுப்பிரமணியன், அப்பா அசுபதி பண்ணையார் ஆகியோர் கொலை வழக்கில் பசுபதிபாண்டியன் தொடர்புடையவர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பசுபதி பாண்டியன் மனைவி ஜெஸிந்தா பாண்டியன், மற்றும் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக இந்த 

கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. எனவே போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய மனுத்தாக்கல் செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும். இதற்கிடையே இந்த 

கொலைச்சம்பவம் காரணமாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்