முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, ஜன. 24 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் இன்று துவங்க இருக்கும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட்டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? இந்திய அணி கெளவரத்தை காப்பாற்றுமா? 

இந்திய அணிக்கு எதிராக நடந்து வரும் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது. எனவே இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

சமீப காலத்தில் இந்திய அணி வெளிநாட்டுத் தொடரில் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறது. முன்னதாக இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. 

இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் அதே போன்ற நிலைமை நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. முன்னாள் வீரர்கள் சிலர் அணியை விமர்சித்து வருகின்றனர். 

முன்னாள் சுழற் பந்து ஜாம்பவனான பிஷன் சிங் பேடி சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய வீரர்கள் பணத்தைக் கொழிக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்துவதால் டெஸ்ட் போட்டி யில் சரியாகஆடவில்லை என்று தனது கண்டனத்தில் தெரிவித்து இருக்கிறார். 

முன்னாள் கேப்டனான கபில் தேவ் அளித்த பேட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் உள்நாட்டுத் தொடரில் நன்றாக ஆடி வருகிறார்கள். ஆனால் வெளிநாட்டுத் தொடரில் மோசமாக ஆடுவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். 

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட்தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 4 சதம் அடித்துள்ளனர். இதில் கேப்டன் மைக்கேல் கிலார்க் அடித்த முச்சதமும் அடங்கும். 

ஆனால் இந்திய தரப்பில் இந்தத் தொடரில் ஒரு பேட்ஸ்மேன்கள் கூட சதம் அடிக்கவில்லை. டெண்டுல்கர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆநால் அவர் 87 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். 

தவிர, டெண்டுல்கர் இதுவரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 99 சதம் அடித்து இருக்கிறார். அவர் ஆஸி.க்கு எதிராக 100 -வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இந்தியஅணி சார்பில் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன் டெண்டுல்கர் மட்டும் தான். அவர் 6 இன்னிங்சிலா ஆடி 249 ரன்னை எடுத்து இருக்கிறார். 

இந்தியாவின் பலமே பேட்டிங் தான். இந்திய அணியில் மட்டும் தான் 7 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் நட்சத்திர வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தத் தொடரில் ரன் எடுக்க தடுமாறி வருவது வேதனை அளிக்கிறது. 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 4-வது டெஸ்டையும் வென்று இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்குவோம் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இந்த டெஸ்டில் தோனிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவருக்குப் பதில் வீரேந்தர் சேவாக் தலைமை தாங்குகிறார். இந்த டெஸ்ட் போட்டி அவருக்கு சவால் நிறைந்ததாகும். 

ஆஸ்திரேலிய அணியின் சவாலை சந்திக்க இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக அடிலெய்டில் அவர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்