முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடுங்குளிரின் பிடியில் வடமாநிலங்கள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. 25 - வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  டெல்லி மாநிலத்தின் மிக குறைந்தபட்சமாக 5.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடுமையான குளிரினால் வெப்பநிலை பல்வேறு இடங்களில் குறைந்து காணப்பட்டது. கோடைகால தலைநகரமான ஸ்ரீநகரில் மைனஸ் 4.2 , குவாஜிகண்டில் மைனஸ் 8.6, கோகர்நாக்கில் மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இமாசல பிரதேசத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக மணாலியில் மைனஸ் 2 டிகிரி அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்