முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பிறந்தநாள்: அண்ணா தொழிற்சங்கப் பேரவை முடிவு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.29 - அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைதலைவர் தாடி. ம. இராசு தலைமையிலும், பேரவை செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும், பேரவை சார்பாக கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சரின் 64 -வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடுவது குறித்து சிறப்பு ஆலைசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம், அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளான, பேரவை துணைத்தலைவர் எஸ். கோவிந்தராஜ், பேரவை துணைத்தலைவர் க. சிங்காரவேல், பேரவை இணைச்செயலாளர் பி. இராஜய்யன், பேரவை இணைச்செயலாளர் ஆர். சிவஞானம், பேரவை இணைச்செயலாளர் ஆர். சங்கரலிங்கம், பேரவை துணைச்செயலாளர் கே. பாண்டுரங்கன் ஆகியோரும், அனைத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரும், அனைத்து மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள், அனைத்து போக்குவரத்துக் கழக தலைவர்/செயலாளர்/பொருளாளர் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் சங்க செயலாளர்கள், டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர்கள், டி.யு.சி.எஸ்., பி.எஸ்.என்.எச்.பி. செயலாளர்கள், ஆவின் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் எம். அப்துல் அமீது நன்றியுரை ஆற்றினார். மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக முதலமைச்சராக்கிய தமிழகத்தின் அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் முதலில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் ஆட்சிப் பொறப்பேற்று 7 மாதங்களில் இந்திய பெருநாடு முழுமைக்கும் முதன்மை உதாரணமாக, வரலாற்று சிறப்புமிக்க புத்தம் புதிய திட்டங்களை அறிவித்து தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தளராத நம்பிக்கையுடனும், உறுதியுடனும் அயராது உழைத்து செயல்பட்டு வரும்  முதல்வர் ஜெயலலிதாவை இக்கூட்டம் தலை வணங்கி வாழ்த்துகிறது.

உள்ளாட்சி மன்றத்தேர்தலில் ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையில் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற்ற வண்ணம் மாநில தேர்தல் ஆணையம் பொதுமக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றதோடு மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்ற அமைப்புகளில் நிர்வாகிகள் வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஜெயலலிதா இக்கூட்டம் பாராட்டுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் 64 -வது பிறந்தநாள் விழா 24.02.2012 முதல் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா தொழிற்சங்க இணைப்பு சங்கங்கள் செயல்படும் இடங்களில் எல்லாம் தொழிற்சங்க கொடிகளை ஏற்றி, இனிப்புகள் வழங்கிட வேண்டும். மேலும் ஏழை-எளியோர் நலம் பேனும் வகையில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள், நலிந்த தொழிலாளர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், ஏழை பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.

சுமார் 50 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாமல் தட்டிக் கழித்து வந்த திருநெல்வேலி மாவட்டம், சேரன் மாதவி `சன் பேப்ர் மில்' நிர்வாகத்தை பணிய வைத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு, அண்ணா தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது போன்ற அண்ணா தொழிற் சங்க கோரிக்கைகளை முழுமனதுடன் நிர்வாகத்தை ஏற்கச் செய்தமைக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பிலும், சன் பேப்பர் மில்லின் ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை அகில இந்திய அங்கீகாரம் பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக 8 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்யப்பட்ட 8 சங்கங்கள் அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைத்து, அதற்கான ஏற்பாடு செய்து முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை அகில இந்திய அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றுவோம் என ஏகமனதாக தீர்மானிக்கிறது உட்பட பல தீர்மானங்கள்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்