முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாராயணசாமியின் கருத்துக்கு சி.என். ராவ் கண்டனம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜன. - 30 - தேவாஸ் ஒப்பந்த சர்ச்சையில் சிக்கியுள்ள இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீதான இணை அமைச்சர் நாராயணசாமியின் விமர்சனத்துக்கு பிரதமரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவர் சி.என்.ராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  மாதவன் நாயர் மீதான விமர்சனம் தவறானது. குப்பையை தூக்கி வீசுவது போல விஞ்ஞானிகளை இந்த அரசு நடத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்பது சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ள கருத்து. தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் எஸ். பாண்ட் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்த போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இது குறித்து 5 பேர் கொண்ட விசாரணை குழுவை மத்திய அரசு அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணை குழுவின் பரிந்துரையை ஏற்று மாதவன் நாயர் உள்ளிட்டோர் அரசு பணிகளில் இருக்க தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, எந்த ஒரு தவறையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற கடுமையான செய்தியை விஞ்ஞானிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார். மேலும் ஊழல் அரசியல்வாதிகளை இது போன்று நடத்துவதில்லை. விஞ்ஞானிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? இது போன்று நடத்தினால் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் பணியாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்றார். மத்திய அமைச்சர் தனது அடிப்படை கல்வியை எங்கு கற்றார் என்று தெரியவில்லை என்றும் சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்