முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தாரில் தலிபான்களுடன் அமெரிக்கா சமரச பேச்சு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

காபூல், ஜன. - 31 - தலிபான்களுடன் சமரசமாக சென்று விட அமெரிக்கா முடிவு செய்ததை அடுத்து கத்தாரில் அவர்களுடன் அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.  பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் மோதவிட்டு தகர்த்தனர். பின்னர் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி நடந்தது. அவர்களது பாதுகாப்பில் இருந்த பின்லேடனை பிடிக்க இந்த தாக்குதல் நடந்தது. தலிபான்கள் ஆட்சியை விட்டு விரட்டப்பட்ட பிறகும் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கேயே உள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டான். அமெரிக்கா எந்த நோக்கத்திற்காக ஆப்கன் மீது தாக்குதல் நடத்தியதோ அந்த நோக்கம் பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து முடிவடைந்தது. எனவே தலிபான்களுடன் சமரசமாக சென்று விட அமெரிக்கா முடிவு செய்தது. இதற்காக தனது தூதர்களை ரகசியமாக அனுப்பி தலிபான்களுடன் பேசியது. இப்போது இரு தரப்பினரும் சமரசமாக சென்று விட முடிவு செய்துள்ளனர். இதன் முதல் கட்டமாக கத்தார் நாட்டில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக தலிபான் பிரநிதிகள் 8 பேர் கத்தார் சென்றுள்ளனர். தலிபான் தலைவர் உமரின் செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரிகள் இதில் கொள்வர். பேச்சுவார்த்தை குறித்து முன்னாள் மந்திரி மவுலவி குலாமுதீன் கூறுகையில், 

அமெரிக்காவில் குவாண்டினாமா ஜெயலில் உள்ள எங்கள் பிரதிநிதிகள் சிலரை மீட்பதற்காக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் முழு சம்மதத்தோடு நடைபெறுகிறது. தலிபான் பிரதிநிதிகள் பாகிஸ்தான் வழியாகத்தான் கத்தார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்