முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அண்ணா ஹசாரே குழு வரவேற்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,பிப்.- 1 - அரசு ஊழியர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டால் அதற்கு ஒரு கால வரைக்குள் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அண்ணா ஹசாரே குழு வரவேற்றுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை தி.மு.க. அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திற்கு ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி கோரியிருந்தார். இது தொடர்பான அவரது மனுவுக்கு பிரதமர் அலுவலகம் சுமார் 16 மாதங்கள் கழித்து பதில் அளித்தது. இது மிகவும் காலதாமதமானதாகும். அனுமதிக்கு ஒரு கால நிர்ணயம் செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு,  ஒரு அமைச்சரோ, அரசு அதிகாரியோ அல்லது அரசு ஊழியரோ யார் மீதாவது வழக்கு தொடரோ அல்லது எதிராக விசாரணை நடத்தவோ ஒரு குடிமகன் அனுமதி கோரினால் அதற்கு 3 மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். 4 மாதமாக பதில் எதுவும் அனுப்பாவிட்டால் அனுமதி வழங்கியதாக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.  இந்த தீர்ப்பை ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் அண்ணா ஹசாரே குழுவினர் வரவேற்றுள்ளனர். எங்களுடைய கோரிக்கைகளில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று அண்ணா ஹசாரே குழுவில் உள்ள கெஜரிவால் தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்வது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாகும். அதனால் புகார் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உயரதிகாரி 4 மாத காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. வழக்கு தொடர அனுமதி அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்