முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தெ.ஆப்பிரிக்கா-வங்க தேசம் - ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதல்

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 19 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டம் நடக் கிறது. ஒரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணியும், மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் மோத உள்ளன. இது பற்றிய விபரம் வருமாறு - தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மிர்பூரில் இன்று காலை 9.00 மணிக்கு துவங்க இருக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் பி பிரிவைச் சேர்ந்தவை ஆகும். 

தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை 5 ஆட்டத்தில் பங்குகொண்டு 4 - ல் வெற்றி , ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகு தி பெற்றுள்ளது. அந்த அணி இந்தியா, மே.இ.தீவு, அயர்லாந்து ,நெத ர்லாந்து அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் தோற்றது. 

வங்களாளதேச அணி இதுவரை 5 ஆட்டத்தில் கலந்து கொண்டு 3 வெ ற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அயர் லாந்து, நெதர்லாந்து அணிகளை வென்று இருந்தது. இந்தியா, மே.இ.தீவு அணிகளிடம் தோற்றது. 

பலமான தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் வங்காளதேசம் கால் இறுதிக்கு தகுதி பெறும். எனவே அதற்காக அந்த அணி வீரர்கள் கடும் பயிற்சி எடுத்து வருகின்றனர். கடந்த உலகக் கோப்பை லீக்கில் இந்தி யா மற்றும் தெ.ஆ. அணிகளை வங்காளதேசம் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. 

கொழும்பில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத் தில், ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோது கின்றன. ஆஸி. அணி நடப்பு சாம்பியன் அணியாகும்.  

ஆஸ்திரேலியா 9 புள்ளியுடனும், பாகிஸ்தான் 8 புள்ளியுடனும் உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதலிடத்தை பிடிக் கும். தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலியா அதை காப்பாற்றிக் கொள்ள போராடும். 

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிக்காக போராடும். இத னால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இந்த ஆட்டத்திற்காக காத்திருக்கின்றனர். 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடக்க இருக்கும் ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் , இ.எஸ்.பி.என். டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்