முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. - 2 - இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதலாவது டி - 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய வாடே அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ஆதரவாக வார்னர், டேவிட் ஹஸ்சே, மற்றும் பிர்ட் ஆகியோர் ஆடினர்.  பின்பு பெளலிங்கின் போது, டேவிட் ஹஸ்சே, கிறிஸ்டியன், ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பிரட் லீ மற்றும் ஹாக் இருவரும் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர்.  ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 -க்கு 20 போட்டி சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய மைதானத்தில் நேற்று நடந்தது.  முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸி. அணி தரப்பில் வார்னர் மற்றும் வாடே இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.  முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித்தது. அந்த அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்னைக் குவித்தது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான வாடே அதிரடியாக ஆடி 43 பந்தில் 72 ரன்னைக் குவித்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.  இறுதியில், அவர் ரெய்னா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். மற்றொரு துவக்க வீரரான வார்னர் 14 பந்தில் 25 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம்.  தவிர, டேவிட்ஹஸ்சே 30 பந்தில் 42 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, பேர்ட் 21 பந்தில் 17 ரன்னையும், கேப்டன் பெ ய்லி 12 ரன்னையும் எடுத்தனர்.  இந்திய அணி சார்பில் வினய் குமார் 28 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, அஸ்வின், பிரவீன் குமார் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இந்திய அணி 172 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்னை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸி. அணி இந்தப் போட்டியில் 31 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0  என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.இந்திய அணி தரப்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக 43 பந்தில் 48 ரன்னை எடுத்தார். தவிர, காம்பீர் 20 ரன்னையும், கோக்லி 22 ரன்னையும், ரெய்னா 14 ரன்னையும், அஸ்வின் 15 ரன்னையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில், டேவிட் ஹஸ்சே 4 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். கிறிஸ்டியன் 35 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட் லீ மற்றும் ஹாக் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வாடே தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்