முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, பிப். - 2 - பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்திப்பெற்றது பழனி முருகன் மலைக்கோவில் ஆகும். பழனி மலைக்கோவிலில் வீற்றிருக்கும் முருகபெருமானின் சிலை 9 வகையான நவபாஷானங்களால் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகபெருமான் சிலை மீது அபிஷேகம் செய்யப்படும் பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களும் மருத்துவக்குணாதிசயங்களைக் கொண்டது. தீராத நோய்களைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தைமாதம் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி நாளில் முருகனுக்கு எடுக்கப்படும்  வெற்றி விழா தான் தைப்பூசமாகும். தாரகன் என்ற அசூரனை அழித்து முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய நாளைத் தான் தைப்பூச திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் காரைக்குடியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை சமூகத்தினர் தான் அதிக அளவில் காவடிகளை சுமந்துகொண்டு பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். ஆனால் தற்போது சாதி,மதம் என்று பாராமல் அனைத்து சாதி, மதத்தினரும் மாலையணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக வருகின்றனர். தைப்பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலை 9.15 மணிக்கு கொடிமண்டபத்தில் முருகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் சப்ரவாகனத்தில் வீற்றிருந்தார். நேற்று காலை 11.45 மணியளவில் மேஷ லக்னத்தில் சேவலும், மயிலும், வேலும் பொறித்த மஞ்சள் நிறக்கொடி தங்ககொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் வடிவேல் முருகனுக்கு அரோகரா என்று குரல் எழுப்பினர்.

இவ்விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கயர்கரசி, நகர்மன்ற தலைவர் வேலுமணி, பழனி யூனியன் சேர்மன் ஏ.டி.செல்லச்சாமி, சித்தனாதன் சன்ஸ், எஸ்.ஜி.தனசேகர், எஸ்.ஜி.பழனிவேலு, எஸ்.என்.செந்தில் குமார், கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர் என்.செல்வக்குமார், மலைக்கோவில் பிரசாத ஸ்டால் என்.அரிகரமுத்து, பில்டிங் காண்ட்ராக்டர் பி.நேரு, நியூ திருப்பூர் லாட்ஜ் மகேஷ், அரிமா சங்க தலைவர் ஆ.சுந்தரம், சங்கராலயம் பாலசுப்பிரமணியம், நகர அ.தி.மு.க. செயலாளர் பரதன், சட்டமன்ற செயலாளர் மகுடீஸ்வரன், துணைத்தலைவர் முருகானந்தம், வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாகிகள் எஸ்.டி.மூர்த்தி, கே.எம். ரத்தினம், தேரடி பாலு, செல்வராஜ், மதனம், நாடார் ஸ்டோர் பாலகிருஷ்ணன், உபயதாரர்கள் செங்குந்த முதலியார் சமூகத்தினர் சபரிடெக்ஸ் ஆர்.தண்டபாணி, சரவணன், சுகிதா மெட்டல் மனோகரன், வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், செங்குந்தர் தர்மபரிபாலன சங்கம் நேரு, அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு வி.ஏ.பாரூக், தாராபுரம் பெரியசாமி, ஜோதி கேஸ் வேலுச்சாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருஞானசம்பந்தம், நகரத்தலைவர் சண்முகநாதன், கவுன்சிலர்கள் கே.சுரேஷ், எஸ்.சுந்தர், பத்மினி முருகானந்தம், மகேஸ்வரி சக்திவேல், இந்திரா திருநாவுக்கரசு ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்