முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. மீனவர்பிரிவுமுடிவு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.- 4 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அ.தி.மு.க. மீனவர் பிரிவு முடிவு செய்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் மீனவர் பிரிவின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், பி.எச்.பாண்டியன், தமிழ்மகன் உசேன், மற்றும் சரவணப்பெருமாள், கமலக்கண்ணன், ஜெனீபர் சந்திரன், ஆதிராஜாராம், சேதுராமன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயக முறையில் நியாயமாகவும், நேர்மையாகவும் உள்ளாட்சிமன்றத் தேர்தலை நடத்தி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்று, அமோக அளவில் வெற்றி பெற்றார். சென்னையில் 85 சதவீத வார்டுகளை கைப்பற்றி, சாதனை படைத்தது அ.தி.மு.க. தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றும் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மிகப் பெருமளவில் அ.தி.மு.க. கைப்பற்றியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சிக்கும், வழங்கிய மகத்தான மக்கள் நலத் திட்டங்கள் தான் காரணம். புதிய வரலாற்றைத் தந்திட்ட முதல்வருக்கு அவர்களை மீனவர் பிரிவு பாராட்டுகிறது. முதல்வரின் 64-வது பிறந்தநாளை பொன்நாளாகவும், நன்னாளாகவும், மீனவர் பிரிவு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடவும் மக்களுக்கு பயன்படும் வகையிலும், பல்வேறு உதவிகளை வழங்கவும் அ.தி.மு.க. கொடியினை ஏற்றவும் மீனவர் பிரிவு தீர்மானிக்கிறது. தானே புயலில் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக 1000 கோடி ரூபாய் அளவில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வரை மீனவர் பிரிவு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு சென்று மீன்பிடிக்கும் உரிமையை பெற வேண்டும் என்றும் பாரதப் பிரதமரையும், மத்திய அரசையும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். ஆனால் மத்திய அரசு பிரச்சினையை தீர்க்கவோ கச்சத்தீவை மீட்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்லை என்று 2008-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மீனவர்கள் உரிமைக்கு தொடர்ந்து போராடி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மீனவர் பிரிவு பாராட்டுகிறது. நாகை மாவட்டத்தில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் வள பல்கலைக்கழகம் அமைக்கவும், மீன்பிடிப்பு குறைந்த காலத்தில் மீனவர்களின் குடும்பம் ஒன்றுக்கு ரூ.4000-ம் நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தினையும் மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.2000-ம் நிவாரணத்தை உயர்த்தியும், கடலில் மீன் பிடிக்கையில் காணாமல் போகும் அல்லது பிற நாடுகளில் சிறை வைக்கப்படும் மீனவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை ரூ.50-லிருந்து ரூ.250-ஆக உயர்த்தியும் மீனவர்களின் வருவாய் பெருகவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வருக்கு நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்