உ.பி.யில் 59 தொகுதிகளில் இன்று 2-வது கட்ட தேர்தல்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ,பிப்.11 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கிறது. 59 தொகுதிகளில் 1098 பேர் போட்டியிடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடக்கும் இந்த 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்துமுடிந்துவிட்டது. அப்போது 56 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று இரண்டாவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் இரண்டு கட்சிகளின் மாநில தலைவர்கள், 31 எம்.எல்.ஏ.க்கள், 24 முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உள்பட 1098 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சாந்த் கபீர் நகர், மகாராஜ்கஞ்ஜ், கோரஹ்பூர், குஷிநகர், தியோரியா, ஆஜம்ஹர், மாவ், பாலியா, காஜிபூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள இந்த 59 தொகுதிகளில் மொத்தம் ஒரு கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 10 மாவட்டங்களிலும் 20 ஆயிரத்து 425 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்ட தேர்தலிலும் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் மார்ச் 6-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: