முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டக்லஸ் தேவானந்தா மீதான வழக்கு பிப்-21-ல் தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.17 - சென்னை சூளைமேட்டில் வாலிபர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில். இலங்கை மந்திரி டக்லஸ் தேவனாந்தாவை தேடப்படும் குற்றவாளி என கூடுதல் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன் சம்மந்த பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் 21-ம் தேதி வெளியாகிறது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற வாலிபர் கடந்த 1986-ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக டக்லஸ் தேவானாந்தா மீது

சூளைமேடு போலீசார் 1987 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு டக்லஸ் தேவானாந்தா இந்தியாவில் இருந்து தப்பி சென்று இலங்கை சென்று விட்டார் பின்பு தற்போது இலங்கை மந்திரியாக தேவானந்தா உள்ளார். அதே சமயம் 1994 ஆம் ஆண்டு டக்லஸ் தேவானாந்தாவை தேடப்படும் குற்றவாளி கடந்த 1994 ஆம் ஆண்டு சென்னை கூடுதல் நீதிபதி உத்தரவுபிறப்பித்திருந்தார். இதற்கிடையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை மந்திரியான டக்லஸ் தேவானாந்தா. அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் அப்பொழுது சென்னை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தேடபடும் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னரும் போலீசார் இந்தியா வந்த அவரை காவல் துறை ஏன் கைது செய்யவில்லை என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை நேற்று நீதிபதிகள் மோகன்ராம் மற்றும் நீதிபதி அக்பர்அலி முன்பு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ரவிந்திரன் வாதிடும்போடும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் படி - வெளிநாட்டை சார்ந்த அமைச்சர் ஒருவர் மீது தேடப்படும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும். அவர் வெளிநாட்டின் மந்திரியாக, அரசு முறை விருந்தினராக இந்தியா வரும் போது அவரை கைது செய்யமுடியாது என வாதிட்டார்.

அதற்க்கு மனுதாரரின் வக்கீல் ராதாகிருஷ்ணன் டக்லஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என இந்தியா அறிவிக்கு மானால். ஒரு தேடப்படும் குற்றவாளியான அவரை கைதிகள் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அவர் எங்கு மறைந்திருந்தாலும். இந்தியாவில் இருந்து அந்த இடத்திற்கே சென்று அவரை கைது செய்து கொண்டு வரலாம் என வாதிட்டார்.

இவ்விரு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் இறுதி தீர்ப்பை வரும் 21-ம் தேதி அன்று வெளியிடுவதாக உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்