முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி - ராசா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்

திங்கட்கிழமை, 26 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.27 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 7 பேர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜாமீன் மனு மீது நாளை மறு நாள் (28-ம் தேதி) விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாளு அம்மாளை தவிர, இந்த வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அனைவருமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மனநிலை சரி இல்லாத காரணத்தால், தயாளு அம்மாள் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

வழக்கு விசாரணையின் போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கப் பிரிவினருக்கு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

அதனைப் பெற்றுக்கொண்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும், ஆவணம் மிகவும் பெரியதாக இருப்பதால் அதனை முழுமையாக படிக்க காலாவகாசம் வேண்டும் என்றனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்