பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால்

வெள்ளிக்கிழமை, 30 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், மே 31- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி உலகின் முதல் நிலை வீரரும், 8 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில்  2-வது சுற்றில் நடால் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தெய்மை தோற்கடித்தார். நடால் அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயரை சந்திக்கிறார். மேயர் தனது 2-வது சுற்றில் 6-2, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டெய்முரஸ் கேபாஷ்விலியைத் தோற்கடித்தார். 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் டேனிலா ஹன்டுசோவா-இஸ்ரேலின் சாஹர் பீர் ஜோடியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. சானியா ஜோடி தங்களின் அடுத்த சுற்றில் கனடாவின் கேப்ரிலா-போலந்தின் அலிஜா ரோஸோல்ஸ்கா ஜோடியை சந்திக்கிறது. 

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் இல்லாத இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிச்-பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்: