முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டுக் காவலில் வைக்கக்கோரிய சுப்ரதாராய் மனு தள்ளுபடி

புதன்கிழமை, 4 ஜூன் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.5 - சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் தன்னை வீட்டுக் காவலில் வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இருப்பினும், இதற்கு முன்பு இந்த வழக்கில் விதித்திருந்த சில கெடுபிடிகளை தளர்த்தி, நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள சஹாரா குழுமத்தின் அசையா சொத்துக்களை விற்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், சஹாரா நிறுவனத்தின் வைப்பு நிதிகள் மற்றும் பாண்டுகளை பணமாக மாற்ற அனுமதி அளித்துள்ளது. ஆனால், அவ்வாறு மாற்றப்படும் பணம் செபி கையாளும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் ரூ.20,000 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய் கடந்த 4 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை விடுவிக்க ரூ.5 ஆயிரம் கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதுடன், மேலும் ரூ.5 ஆயிரம் கோடியை பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

அதில், சுப்ரதா ராயை விடுவிப்பதற்கான ரூ.10,000 கோடியை உடனே செலுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுப்ரதா ராய் ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, சுப்ரதா ராய் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வீட்டுக்காவலில் வைக்கமாறு கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்