முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் அதிபருடன் புதின் சந்திப்பு

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பெனோவில்லி, ஜூன் 8 - ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைனில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ போரோஷென்காவும் நேரில் சந்தித்து உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர். 

2ம் உலகப் போரின் போது நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்சை விடுவிக்க நேச நாடுகளின் படைகள் அந்நாட்டின் நார்மண்டி பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டதன் 70வது ஆண்டையொட்டி அங்கு டி டே விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் பெட்ரோ, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் பிரான்சுவா உள்ளிட்ட நேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதினை பிரிட்டன் பிரதமர் கேமரூன் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் மீதான தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தினார். 

அதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக இந்த இரு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்து அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென்ரோட்ஸ் கூறுகையில், இரு தலைவர்களும் 17 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இது அதிகாரபூர்வ சந்திப்பு அல்ல. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார். இதையடுத்து புதின், உக்ரைன் அதிபராக பதவியேற்றுள்ள போரோஷென்கோவை முதல் முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உக்ரைன் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களை நிறுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய ஆதரவு படையினருக்கும், அரசு படையினருக்கும் மோதல் நடந்து வரும் நிலையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு போரோஷென்கா ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பது இதுவே முதல் முறை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago