முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரத்தில் 5 நாள் வேலை: எஸ்.பி.ஐ. வங்கி சம்மேளனம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், ஜூன் 10 - வாரத்தில் 5 நாள் வங்கிகள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் சங்க மதுரை மண்டல 2ம் மாநாடு மதுரை வேளாண்மை கல்லூரி தியாகி கக்கன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தலைமை வகித்து அகில இந்திய பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் சம்மேளன பொது செயலாளர் சுதர்சன் தொடங்கி வைத்தார். 

இதில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வங்கி அதிகாரிகளின் குழந்தைகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். சுதர்சன் பேசுகையில், மத்தியில் ஏற்கனவே இருந்த அரசின் தொழில் மற்றும் வங்கி தொடர்பான கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மீது புதிய அரசு எடுக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து விளக்கினார். நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் சங்கத்தின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், வங்கியில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது போன்ற பணிகள் எளிமையாக ஏ.டி.எம். மூலம் கணிணி மயமாக்கப்பட்டு வருகிறது. எனவே வங்கி வேலை நாளை வாரத்தில் 5 நாளாக குறைக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு போதிய ஆட்களை நியமிக்க வேண்டும். நிறுத்தப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான பணி ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும். அரசு பணியில் இறந்த ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது போல வங்கி பணியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மதுரை மண்டல தலைவர் சேது வரவேற்றார். அதிகாரிகள் சங்க பொது செயலாளர்(சென்னை மண்டலம்) தாமஸ்பிரங்கோ, ராஜேந்திரதேவ், எஸ்.பி.ஐ. மதுரை மண்டல துணை பொது மேலாளர் நரசிம்மன், எஸ்.பி.ஐ. ஊழியர் சங்க பொது செயலர் பாஸ்கரன், மதுரை பேராசிரியர் ராஜாகோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்