முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச் சந்தையை ஒழிக்க நடவடிக்கை உறுதி: அருண்ஜெட்லி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 10 - அதிகப் பணவீக்க சுழற்சி மற்றும் உயர் வட்டி விகிதம் ஆகியவற்றை முறியடிக்க நடவடிக்கைகளை பரிசீலித்தார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனையாக அவர் நேற்று அனைத்து மாநில நிதியமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உயர் வட்டி விகிதம் மற்றும் அதிகப் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை முறியடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது.

"நீண்டகால பணவீக்கம் சாமானிய மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த அதி பணவீக்க சுழற்சி மற்றும் உயர் வட்டி விகிதம் ஆகியவற்றை உடைக்க நாங்கள் நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம்" என்றார் ஜெட்லி.

மேலும், பொருளாதார வளர்ச்சி மந்தத்துடன், உயர் பணவீக்க விகிதமும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும்  கீழே உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை பரிசீலிக்கவுள்ளதாகவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை ஆகியவற்றை முறியடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம் என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்று ஜெட்லி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்